வட மாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்தி... கண்காணிக்க குழுவை அமைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு!!

By Narendran SFirst Published Mar 8, 2023, 10:50 PM IST
Highlights

வடமாநிக தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வடமாநிக தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரபரப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வதந்தி வேகமாக பரவியதை அடுத்து வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவியது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ உண்மையில்லை என்றும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க: ரூ.430 கோடி மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் திட்டம்... கே.என்.நேரு முன்னிலையில் கையெழுத்தானது ஒப்பந்தம்!!

மேலும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினர். பீகார் மாநிலத்தில் இருந்து அரசு அதிகாரிகள் குழு தமிழகம் வந்து வடமாநில தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டது. இத்தகைய பரபரப்பான சூழலில் அரசு வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்த நிலையில் வடமாநிக தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழு வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!