வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. பதறி அடித்து ஓடிய மக்கள்.. திருப்பதியில் பரபரப்பு

Published : Jul 15, 2022, 12:43 PM IST
வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. பதறி அடித்து ஓடிய மக்கள்.. திருப்பதியில் பரபரப்பு

சுருக்கம்

திருப்பதியில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார்.   

திருப்பதியில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த வேதாச்சலம் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில வாரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நேற்றும் திருப்பதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது.? பெரியார் பல்கலை. தேர்வின் கேள்வியால் சர்ச்சை...! கட்சி தலைவர்கள் ஆவேசம்

இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். வெயில் காரணமாக, வரிசையில் நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்களை ஏராளமானோர் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் கரகம்பாக்கம் பகுதியை சேர்ந்த 64 வயதாகும் வேதாச்சலம் என்பவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகனுடன் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார். 

மேலும் படிக்க:நேர்ல வர முடியல.. கண்டிப்பாக ஃபங்ஷனுக்கு வந்துடுங்க.. கொரோனா பாதிப்பிலும் பிரதமரை அழைத்த முதல்வர்

இந்நிலையில் எஸ்.என்.சி காம்ப்ளக்ஸ் அருகே சென்ற போது வேதாச்சலம் திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த அவரது மனைவி மற்றும் மகன் தண்ணீரை கொடுத்து அவரை எழுப்ப முயற்சித்தனர். தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தொடர்புக்கொண்டு,  வேதாச்சலத்தை மீட்டு அருகில் உள்ள அஸ்வினி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க:சென்னை ஐஐடி(IIT) நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு

PREV
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!