தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது.? பெரியார் பல்கலை. தேர்வின் கேள்வியால் சர்ச்சை...! கட்சி தலைவர்கள் ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Jul 15, 2022, 11:43 AM IST

பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. எனவே இந்த பிரச்சனைகுரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


பெரியார் பல்கலை. தேர்வு-சர்ச்சை

சாதி, மதங்களுக்கு எதிராக போராடிய பெரியார், ஆனால் அவருடைய பெயரில் இயங்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என கேட்கப்பட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட் சாதி என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அதற்கான 4ல் இருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த நான்கில் மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் என 4 சாதி பெயர்களை குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்க்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா கேட்கப்பட்டுள்ளதாகவும், இதற்க்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  

Latest Videos

சின்னவர் என என்னை கூப்பிட்டால் பலருக்கு வயிற்றெரிச்சல்...! எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி

விலையில்லா லேப்டாப்பில் இருந்து ஜெயலலிதா, இபிஎஸ் படம் நீக்கம்..!அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு

தாழ்த்தப்பட்ட சாதி எது ?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது! தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின்  சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது! வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது?சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை  நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்! என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பொன்னையன் முன்பை போல் இல்லை..! பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்-சீறிய துரைமுருகன்

 

click me!