தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா… ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று!!

Published : Jul 14, 2022, 08:56 PM IST
தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா… ஒரே நாளில் 2,283 பேருக்கு தொற்று!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,269 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,283 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,269 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,283 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட மாணவர்களுக்கு தடை.. பள்ளிக்கு செல்போன் கூடாது.. சமூக பாதுகாப்பு துறை அதிரடி

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 682 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,028 ஆகவே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17,858 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,54,923 ஆக உள்ளது.

இதையும் படிங்க: விலையில்லா லேப்டாப்பில் இருந்து ஜெயலலிதா, இபிஎஸ் படம் நீக்கம்..!அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு

மாவட்ட வாரியாக: அரியலூர் 6, செங்கல்பட்டு 367, சென்னை 682, கோயம்புத்தூர் 156, கடலூர் 22, தர்மபுரி 6, திண்டுக்கல் 22, ஈரோடு 30, கள்ளக்குறிச்சி 8, காஞ்சிபுரம் 102, கன்னியாகுமரி 61, கரூர் 5, கிருஷ்ணகிரி 12, மதுரை 27, மயிலாடுதுறை 5, நாகப்பட்டிணம் 10, நாமக்கல் 25, நீலகிரி 8, பெரம்பலூர் 10, புதுகோட்டை 17, ராமநாதபுரம் 13, ராணிப்பேட்டை 40, சேலம் 67, சிவகங்கை 24, தென்காசி 20, தஞ்சாவூர் 21, தேனி 14, திருப்பத்தூர் 6, திருவள்ளூர் 176, திருவண்ணாமலை 24, திருவாரூர் 19, தூத்துக்குடி 56, திருநெல்வேலி 41, திருப்பூர் 28, திருச்சி 46, வேலூர் 14, விழுப்புரம் 47, விருதுநகர் 46 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !