முதல்வர் குறித்து அவதூறு! சி.வி.சண்முகத்தின் பேச்சு ஏத்துக்கவே முடியாது! தீர்ப்பில் நீதிபதி வைத்த ட்விஸ்ட்!

By vinoth kumar  |  First Published Aug 12, 2024, 11:34 AM IST

கடந்த 2022ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. 


கடந்த 2022ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2022ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக  திண்டிவனம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Udhayanidhi : 19ஆம் தேதி துணை முதல்வராகிறார் உதயநிதி.? மூத்த அமைச்சரின் பேச்சால் வெளியான தகவல்

இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு நடைபெற்று வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதேசமயம் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பியதை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். 

இதையும் படிங்க:  ஆம்ஸ்ட்ராங் கொலை! கூட இருந்தே கழுத்தறுத்துட்டாங்க! மக்கள் கேள்வி கேட்டதால் அரசு பயந்து போச்சு! பா.ரஞ்சித்!

இந்நிலையில் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

click me!