Udhayanidhi : 19ஆம் தேதி துணை முதல்வராகிறார் உதயநிதி.? மூத்த அமைச்சரின் பேச்சால் வெளியான தகவல்
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதிஅமெரிக்கா செல்லவுள்ளார். இந்தநிலையில் வரும் 19ஆம் தேதி துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாகவும் அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
udhayanidhi stalin
உதயநிதியும் திமுகவும்
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை இழந்த திமுக, அடுத்து சுமார் 8 ஆண்டுகள் ஒரு தேர்தல்களில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களை பிடித்தது. இந்த வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரம் முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதற்கு பரிசாக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
udhayanidhi aims
அமைச்சராக உதயநிதி
அடுத்ததாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் முக்கிய பங்காற்றிய உதயநிதி, 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை 10ஆண்டுகளுக்கு பிறகு எனவே அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒராண்டுக்கு பின்னரே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
துணை முதல்வராகிறார் உதயநிதி
இதனைதொடர்ந்து உதயநிதிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அடுத்தடுத்து திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அது பழுக்கவில்லை என கூறியிருந்தார். இந்தநிலையில் வருகிற 19ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையிலும் மாற்றம்
அதே நேரத்தில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு செஞ்சி மஸ்தான் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் சரியான முறையில் செயல்படாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணப்பன் கூறியது என்ன.?
இந்தநிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழக்குவது தொடர்பாக அமைச்சர் கண்ணப்பன் இன்று நடைபெற்ற நிகழ்வில் வெளிப்படையாக தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பேசியவர், உதயநிதியை வருகிற 19ஆம் தேதிக்கு பிறகு துணை முதலமைச்சர் என்று அழைக்கனும் என கூறினார். எனவே வருகிற முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி அமெரிக்க செல்வதற்கு முன்பாக உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.