ஆம்ஸ்ட்ராங் கொலை! கூட இருந்தே கழுத்தறுத்துட்டாங்க! மக்கள் கேள்வி கேட்டதால் அரசு பயந்து போச்சு! பா.ரஞ்சித்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வாங்கி தரக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Armstrong Murder Case
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பலூர் அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் சினிமா மிஞ்சும் அளவில் த்ரில்லிங்காக இருந்து வருகிறது. இதுவரை கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர்களட அருள், ஹரிஹரன், அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Police Arrest
குறிப்பாக இந்த வழக்கில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என முக்கிய கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரெல்லாம் பின்னணியில்? 7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன?பால் கனகராஜ் பரபரப்பு தகவல்
Bahujan Samaj Party Protest
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வாங்கி தரக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியுமான ஆம்ஸ்ட்ராங் தனது மகளுடனும், நடிகர் தீனா, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Pa Ranjith
அப்போது மேடையில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இதன்மூலம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விரைவாக செயல்படுவதற்கான தேவையை ஏற்படுத்தி உள்ளோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.
Pa Ranjith Vs Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒவ்வொரு பெயரையும் பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த நபர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களுடைய போராட்டம் எழுச்சியை கண்டு அவர்கள் வாயெடுத்து போய் இருக்கிறார்கள். இதனால்தான் விசாரணையை முடிக்கி விடப்பட்டது என கூறினார்.