டிசம்பர் 24 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

By Raghupati RFirst Published Dec 20, 2022, 10:36 PM IST
Highlights

டிசம்பர் 24ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் பல்வேறு திருவிழாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவம்  வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகையின் முதல் நாள் மாலை, கிறிஸ்மஸ் ஈவ் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில், அன்றைய தினம் மாலை சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்தல், அலங்கார விளக்குகள் மற்றும் நட்சத்திரங்களை தொங்க விடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி, கிறிஸ்துமஸ் ஈவ்-ஐ முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 11 ஆம் தேதி வேலைநாளாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

click me!