திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(38). கூலி வேலை செய்து வந்தார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருச்சி அருகே கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(38). கூலி வேலை செய்து வந்தார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோகுல்நாத் (14) என்ற மகனும், நந்தினி (11) என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்திக்கு கடன் சுமையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
undefined
இதையும் படிங்க: மாநகர பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? போக்குவரத்து மாற்றம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வழக்கம் போல இரவில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு காலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கீர்த்திகா, மகன் கோகுல்நாத், மகள் சாய்நந்தினி ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி அலறி கூச்சலிட்ட படி அழுது கதறினார்.
இதையும் படிங்க: School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் சுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.