களைகட்டும் தீபாவளி விற்பனை; துணிக் கடை முதல் இனிப்பகம் வரை அலைமோதும் மக்கள் கூட்டம்…

First Published Oct 17, 2017, 7:36 AM IST
Highlights
Dealer sales Waiting for the store to the first sweetie ...


புதுக்கோட்டை

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புதுக்கோட்டையில் உள்ள துணிக்கடை, நகைக்கடை, மற்றும் இனிப்பகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், கடைகளில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்பே துணி எடுத்து விடுவது என்று சிலர் இருந்தாலும், தீபாவாளிக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது கடைசி நேரத்தில் கடைகளை நோக்கி அலைகடலேன திரளும் மக்கள்தான் அதிகம்.

புதுக்கோட்டை நகரில் உள்ள துணிக் கடைகள், மளிகைக் கடைகள், பல்வேறு வீதிகளில் வியாபாரிகள் அமைத்துள்ள தரைக்கடைகளும் மக்களை பெருமளவு கவர்ந்திழுத்து வருகின்றன.

தீபாவளியை புதுக்கோட்டை நகரில் கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி,மேல ராஜ வீதி,தெற்கு ராஜ வீதி, கீழ 2, தெற்கு 2, 3-ஆம் வீதிகள் அமைந்துள்ள பெரிய துனி கடை, பாத்திரக் கடை, நகைக் கடை, மளிகைக் கடை, இனிப்பகம், வளையல் கடைகளில் அலைமோதும் மக்கள் கடந்த மூன்று நாள்களாக  தங்களுக்கு வேண்டிய பொருட்களை குடும்பத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இந்தாண்டு கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதிகளில் தரைக் கடைகள் அதிகரித்துள்ளன.  இதில் துணி வகைகள், வளையல் பாசி, கவரிங் நகைகள், போர்வை, டி. சர்ட், வேஷ்டி, கைலி, பனியன், குழந்தைகளுக்கான பேன்சி ஆடைகள், காலணிகள், பிளாஸ்டிவாளிகள், கூடைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகைகளில் பொருள்கள் குவிந்துள்ளன.

சாலையோரக் கடைகளில் மக்கள் தங்களுக்குத் தேவையான மலிவு விலை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் மக்கள் கூட்டம் சென்ற ஆண்டைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. 

கடைவீதிகளில் காவலாளர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். காலியிடங்களில் செயல்படும் தாற்காலிக கடைகளில் ரூ.10 ரூ.20 ரூ.50 என்ற விலையில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர். கிராம மக்களும் அதிகளவில் கடை வீதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றர்.

click me!