தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம் கூட காணாமல் பிரசவத்தில் உயிரிழந்த மகப்பேறு மருத்துவர்.! புதுக்கோட்டையில் சோகம்

By Ajmal Khan  |  First Published May 2, 2024, 10:50 AM IST

பிரசவ வலி ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்காத காரணத்தால் மகப்பேறு மருத்துவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகப்பேறு மருத்துவர அஞ்சுதா

மகப்பேறு மருத்துவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் மகள் அஞ்சுதா, இவர், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருராஎ பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக், இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சுதாவிற்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். ஆனால் காலதாமதாம அனுமதிக்கப்பட்டதால் பிரசவத்தின் போது இரட்டை குழந்தையை பெற்றெடுத்து உயிரிழந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

பிரசவத்தில் உயிர் இழந்த அஞ்சுதா

இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தியில், “தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்” நடைபெற்றுள்ளதாக குறுப்பிட்டுள்ளார்.  மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

“தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்”

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான… pic.twitter.com/JwjBo9AXaA

— Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK (@Vijayabaskarofl)

 

விஜயபாஸ்கர் இரங்கல்

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார். மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம். மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் பேனரை டார் டாராக கிழித்ததற்கு போலீஸிடம் செம்ம டோஸ் வாங்கிய அஜித் ரசிகர் - மன்னிப்பு கேட்கும் வீடியோ இதோ

click me!