மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் பொம்மை தான் எடப்பாடி.! வேற லெவலில் பதிலடி கொடுத்த கம்யூனிஸ்ட்

Published : Jul 19, 2025, 01:55 PM IST
cpm shanmugam

சுருக்கம்

அதிமுக மற்றும் பாஜக தலைவர்களின் விமர்சனங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். மிழிசையின் உண்டியல் குலுக்குவது குறித்த விமர்சனம் கேலிக்குரியது என்றும் சண்முகம் கூறியுள்ளார்.

CPM criticizes EPS : கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றி தொடர்ந்து விமர்சித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, கம்யூனிஸ்டுகளை மிக கடுமையாக தாக்கி பொதுமக்கள் மத்தியிலேயே பேசியிருக்கிறார். 

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, தற்போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற காலத்திலும் ஒன்றிய பாஜக அரசாங்கம் எதை செய்தாலும் அது மாநில உரிமையை பாதிக்கின்ற விஷயமாக இருந்தாலும் மக்களுக்கு விரோதமான நடவடிக்கையாக இருந்தாலும் விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளாக இருந்தாலும் இவை அனைத்தையும் ஆதரிக்க கூடிய நபராகத்தான் கடந்த 8 ஆண்டுகளாக எடப்பாடி அவர்கள் இருந்திருக்கிறார்.

மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் பொம்மையாகத்தான் இவ்வளவு காலம் செயல்பட்டு இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். அப்படிப்பட்டவர் கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என்று குற்றம் சாட்டி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசாங்கம் எடுத்தாலும் தமிழக அரசு எடுத்தாலும் அதை எதிர்த்து வலுமிக்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாமல் போயிருந்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன போராட்டம் நடத்தி இருக்கிறோம் என்பதை நான்கு ஆண்டுகால தீக்கதிர் பத்திரிக்கையை அனுப்பி வைக்க தயாராக இருக்கிறேன்

எனவே போராடுவதற்கு கம்யூனிஸ்ட்களுக்கு சொல்லித் தரக்கூடிய இடத்தில் எடப்பாடிக்கு இல்லை. அவர் சொல்லி கேட்கக்கூடிய இடத்திலும் நாங்கள் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பணம் வாங்கிய பிரச்சினையை 2019 இல் இருந்து சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவோடு நாங்கள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டபோது தேர்தல் செலவுக்காக இண்டு தொகுதியிலே திமுக கொடுத்த பணம் அது. அதை வாங்கி நாங்கள் அப்படியே கொடுத்து விட்டோம். மறைமுகமாகவோ ஏமாற்றும் விதத்திலோ அதை வாங்கவில்லை. அது நேரடியாக அக்கவுண்ட்க்கு வந்து தேர்தல் ஆணையத்தின் வரவு செலவில் வருமானவரித்துறையின் வரவு செலவில் சேர்க்கப்பட்டிருக்கு. மறைமுகமாக ஒன்றும் அந்த பணத்தை வாங்கவில்லை.

தேர்தல் செலவுக்காக திமுகவால் கொடுக்கப்பட்டது அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒரு தொண்டன் கூட சாப்பிடவில்லை என்பதை என்னால் கூரையில் நின்று கூவி சொல்ல முடியும். ஒரு அபட்டமான குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் கூட கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவதை கைவிட்டு விட்டார்கள் சூட்கேஸ் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறினார். ஒரு காலத்தில் நாங்கள் உண்டியல் குலுங்குவதை கேலி செய்தவர்தான் தமிழிசை சௌந்தரராஜன்.

 உண்டியல் குலுக்குவது ஒன்றும் எங்களுக்கு கேவலம் இல்லை கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சாதாரண மக்கள் எவ்வளவு தர முடியுமோ அதை பெற்று கட்சியினுடைய செயல்பாடுகளுக்காக அந்த நிதியை வசூலிப்பது காலங்களமாக நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் இப்போதும் கூட மாநாட்டிற்காக உண்டியல் மூலம் மக்களிடம் வசூல் செய்து தான் நடத்தி வருகிறோம். ஒரு சமயம் தமிழிசை சௌந்தரராஜன் இருக்கும் பகுதிக்கு எங்கள் தொண்டர்கள் செல்லவில்லை என்று நினைப்பதாக சண்முகம் தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்