என் உயிருக்கு ஆபத்து.. டிஎஸ்பி விஷ்ணு பிரியாவை நியாபகம் இருக்கா? பகீர் கிளப்பும் DSP சுந்தரேசன்

Published : Jul 19, 2025, 01:53 PM IST
dsp sundaresan mayiladuthurai

சுருக்கம்

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள அவர், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறையில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றும் சுந்தரேசன் இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “எனக்கு முந்தைய காலங்களில் விதிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளை இப்போது முன்வைக்கிறார்கள் உடனே சஸ்பெண்ட் செய்திருப்பார்கள். ஒருவர் பிடிக்கவில்லை என்றால் கை பட்டால் குற்றம், கால் பட்டாலும் குற்றம்தான் காவலர்களின் நிலைமை.

டிஎஸ்பி சுந்தரேசன் பேச்சு

நான் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். நேர்மையான போலீசாருக்கு குற்றச்சாட்டுகள் கட்டாயம் வருகிறது. என் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இதுவரை என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை. கடந்த 11 மாதமாக இரவு பகலாக பணியில் இருக்கிறேன். விசாரிக்காமல் எப்படி டிஐஜி என்னை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யலாம்?" என கேள்வி எழுப்பினார்.

நான் ஓடிப்போகவில்லை

மேலும், “மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். நான் ஓடிப் போகவில்லை. என் தந்தைக்கு சென்னையில் ஹார்ட் அட்டாக் மேலும். விடுமுறை கோரி எஸ்பிக்கு தகவல் அனுப்பியுள்ளேன். ஆனால் பதில் இல்லை. குடும்பத்துடன் சென்னைக்கு செல்ல வேண்டும். இது குறித்து டிஐஜி அறிந்திருப்பார். ஆனால் இதுவரை என்னை விசாரிக்கவில்லை,” என்றார். அதே நேரத்தில், “நான் டிஎஸ்பி விஷ்ணுப்ரியா வழக்கை விசாரித்தேன்.

முதல்வர், டிஜிபி ஏன் தலையிடவில்லை

மேலும், ஐபிஎஸ் விஜயகுமாருடன் நேரில் பணியாற்றவில்லை என்றாலும், அவர் எனக்காக நல்லது கூறியுள்ளார். ஆனால், முதல்வர் மற்றும் டிஜிபி ஏன் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என தெரியவில்லை,” என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சிலரது சுயநலக்காரணமாக நாங்கள் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகிறோம். சட்டம் தெரியும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நான் உண்மையை பேசுகிறேன் என்பதற்காக என்னை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். எனது தந்தை உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். என் மீது தவறு இருந்தால் என்னை தூக்கிலிடலாம். ஆனால் நான் தவறாக முடிவெடுக்க மாட்டேன். எனது பிரச்சனையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக விசாரணை செய்ய வேண்டும்” என்று உருக்கமாக தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!