நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு? அப்டேட் கொடுத்த கம்யூனிஸ்ட்! தோழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்!

Published : Aug 25, 2025, 08:44 PM IST
nallakannu

சுருக்கம்

நேர்மையான அரசியல் தலைவரான ஐயா நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்டேட் கொடுத்துள்ளது.

CPI Leader Nallakannu Health Update! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நேர்மையான அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும், எளிமையின் வடிவம் ஐயா நல்லகண்ணு (100) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.

ஐயா நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நல்லகண்னுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். மேலும் தவெக தலைவர் விஜய்யும் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து போன் மூலம் கேட்டறிந்தார். இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல்நிலை நன்றாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நல்லகண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு தீவிரச் சிசிச்சை பிரிவில் - அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காபி அருந்தும் போது பொறையேறிதால், சற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் தோழர் இரா.நல்லகண்ணு உடல் நிலை சீராகி இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பி, முன்னேற்றம் கண்டு வருகின்றது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வைகோ, திருமாவளவன் நலம் விசாரித்தனர்

டாக்டர்கள் ஜி.ஆர். ரவீந்தரநாத், ஏ.ஆர்.சாந்தி, தோழர் ஆர்.என்.கே. மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். இன்று (25.08.2025) காலையில் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் மருத்துவமனை சென்று தோழர் இரா.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, மே 17 இயக்கப் பொதுச் செயலாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்துள்ளனர்.

நேரில் யாரும் பார்க்க வர வேண்டாம்

இன்னும் இரண்டொரு நாட்களில் தோழர் இரா.நல்லகண்ணு உடல் நலம் பரிபூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கூறும் மருத்துவர்கள், தற்போது அவரை நேரில் காண்பதற்கு சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு நேரில் வருவதை தவிர்த்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் என்பதை அனைவரின் கவனத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, தோழர்கள், நண்பர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு நேரில் செல்வதை தவிர்த்து உதவுமாறு மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காவல் நிலையத்தில் புகுந்து காவலருக்கு வெட்டு.. தமிழகத்தில் தினமும் 5 படுகொ**லை.. ஷாக் கொடுக்கும் அன்புமணி
தனிக்கட்சியா..? அமித்ஷாவிடம் பேசியது என்ன? உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ்!