தேர்தலில் போட்டியிடாமல் உங்களுக்கு எதுக்கு கட்சி?.. தமிழகத்தின் 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை?

Published : Aug 25, 2025, 06:59 PM IST
Election commission of India

சுருக்கம்

தமிழகத்தில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

TN EC Notice to 6 Parties Before 2026 Polls! தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியை துவக்கி விட்டன. இந்நிலையில், தமிழகத்தில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கட்சிகள் பெறும் சலுகைகள் என்னென்ன?

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29கின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி கீழ்க்கண்ட சலுகைகளை பெறுகிறது. அதாவது, வருமான வரி விலக்கு (பிரிவு 13கி வருமான வரி சட்டம்) அங்கீகாரம் (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 6), பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 108) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள், நட்சத்திர பிரசார நியமனம் ஆகிய சலுகைகளைப் பெறும்.

இந்த 6 கட்சிகளுக்கு நோட்டீஸ்

அத்துடன் பதிவு செய்யப்பட்ட கட்சியானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 29கி-ன் படி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இதில் சென்னை மா தேர்தல் அலுவலர் வரம்பிற்கு உட்பட்ட முகவரியில் உள்ள கீழ்கண்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1. கோகுல மக்கள் கட்சி, பு.எண்.7. ப.எண்.3, வெங்கட்ராமன் தெரு, தேனாம்பேட்டை, சென்னை- 600 018.

2. இந்தியன் லவ்வர்ஸ் பார்டி, எண்-23, பி-பிளாக், 2வது தெரு, பூபதி நகர், கோடம்பாக்கம், சென்னை-600 024.

3. இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.எண்.3, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.

4. மக்கள் தேசிய கட்சி, 137, கக்கன் காலனி, நுங்கம்பாக்கம், சென்னை 600 034.

5. மனிதநேய மக்கள் கட்சி, 3வது மாடி, வட மரக்காயர் தெரு. சென்னை 600 001.

6. பெருந்தலைவர் மக்கள் கட்சி, NRD டவர்ஸ், முதல் அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083.

6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை

மேற்கண்ட பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் வேட்பாளர்களை போட்டியிட நியமிக்கவில்லை என்பதற்காக இந்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏன் பதிவை ரத்து செய்யக் கூடாது?

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள கட்சிகளுக்கு சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் அவர்களின் கடிதம் எண் 6580/2025-1 பொது (தேர்தல் 3) துறை நாள் 12.08.2025-ன் படி தங்கள் கட்சியின் பதிவினை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தினை தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் வரும் 26.08.2025-ம் தேதியன்று நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக அளிக்க காரணம் கேட்கும் நோட்டீஸ் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!