ஜே.என்.1 மாறுபாடு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
JN.1 மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், பல நாடுகளிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 162 பேருக்கு ஜே.என்.1 மாறுபாடு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக கேரளாவில் 83 பேருக்கு இந்த மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குஜராத் 34 பேருக்கும், கர்நாடகா 8 பேருக்கும், மகாராஷ்டிரா 10 பேருக்கும், ராஜஸ்தான் 5 பேருக்கும், தமிழ்நாடு 4 பேருக்கும், தெலுங்கானா இருவருக்கும் மற்றும் டெல்லியில் ஒருவருக்கும் ஜே.என்.1 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இணை நோய் உள்ள நபர்கள் மற்றும் வயதானவர்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தற்போது அவசியமில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர், பொதுவாக குளிர்கால மாதங்கள் மற்றும் மாசுபாடு காலங்களில் வைரஸ் பாதிப்பு மற்றும் சுவாச நோய் அதிகரிக்கும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் ஜே.என்.1 கொரோனாவால் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.தெற்காசிய நாடுகளில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. எனினும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 -4 நாட்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். புதிய வகை கொரோனா தொற்று - பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. புதிய கொரோனா உருமாற்றமானது அதிக அளவிலான கூட்டு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இணைநோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். 1.25 லட்சம் படுக்கை வசதி தயார் நிலையில் உள்ளது, 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.