13 வயதில் உடல் உறுப்பு தானம்; சிறுவனின் குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் பாராட்டு

By Velmurugan s  |  First Published Dec 30, 2023, 10:44 AM IST

விபத்தில் மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு மருத்தவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


வேலுர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொள்ளக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் தனலட்சுமி தம்பதியர். இவர்களின் இளைய மகன் சந்தோஷ் (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில் சந்தோஷ் கடந்த 28ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் நாராயண குப்பம் அருகே விபத்து ஏற்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார்.

Latest Videos

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்‌ அனுமதித்தனர். 2 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவவன் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதையடுத்து உயிரிழந்த  சந்தோஷின் உடலின் உள்ள இதயம், இரண்டு நூரையீரல்கள் சென்னையில் உள்ள MGM மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரம், ராணிப்பேட்டை CMC  மருத்துவமனைக்கும் தானமாக செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன் அடிப்படையில் சிறுவனின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தானமாக பெற்றுக்கெள்ளப்பட்டன. 

click me!