கோரமண்டல் ரயில் விபத்து: மூன்று தமிழர்கள் விவரம் தெரிந்தது!

By Manikanda Prabu  |  First Published Jun 4, 2023, 6:07 PM IST

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்கள் மூன்று பேரின் நிலை தெரியவந்துள்ளது


ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும். பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும், ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக இரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழகத்தை சார்ந்தவர்களின் விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களை தொடர்பு கொண்டதில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாநில அரசு, அவர்களது பெயர்களை வெளியிட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

அதன்படி, (1) நாரகணிகோபி, ஆண், வயது - 34 , (2) கார்த்திக், ஆண், வயது -19, (3) ரகுநாத், ஆண். வயது - 21, (4) மீனா, பெண், வயது - 66, (5) எ. ஜெகதீசன், ஆண், வயது - 47, (6) கமல், ஆண், வயது - 26, (7) கல்பனா, பெண், வயது - 19, (8) அருண், ஆண், வயது -21 ஆகிய 8 நபர்களது பெயர்களை வெளியிட்டுள்ள தமிழக அரசு, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது? ரயில்வே வாரியம் விளக்கம்!

இந்த நிலையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழர்கள் மூன்று பேரின் நிலை தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை தெரியாமல் இருந்த நிலையில், அதில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோவையை சேர்ந்த நாரகணிகோபி, சென்னையை சேர்ந்த ஜெகதீசன், ஆகிய இருவரும் வீடு திரும்பியுள்ளனர். கமல் என்பவர் விபத்துக்குள்ளான ரயிலில் பயணிக்கவில்லை என தெரிவித்துள்ள கட்டுப்பாட்டு மையம், மீதமுள்ள கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா, அருண்  ஆகிய 5 பேரை  தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களின் நிலை குறித்து விசாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. தகவல் தெரிந்தவர்கள் 044-28593990, 94458 69843 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!