இந்து மத கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் தஞ்சை பெரியகோயில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் கோவில் கோபுர வளாகத்திற்குள் மாமிச உணவுகளை உண்ணும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஆனால் இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டு எழுந்தது.
பக்தர்கள் அளித்த புகாரின் பேரில் கோயிலுக்குள் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் காவல்துறை உதவியுடன் வெளியேற்றபட்டனர். மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், சிலர் கோவில் கருவறைக்கு முன் உள்ள முற்றத்தில் அமர்ந்து உணவு உண்கின்றனர்.
அந்த உணவு பிரியாணி ஆகும். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து இந்து மத ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். “தமிழகத்தில் ஒரு கோவிலுக்குள் ஒரு கும்பல் வெட்கத்துடன் சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறது.
இது தொடர் வெறுப்பு அரசியல். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம்” என்றும், இத்தகைய செயல் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது" என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதற்கு மக்கள் பல்வேறு வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பலர் அதை ஆதரித்து வருகின்றனர். இந்த கோவில் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள பெருமாள் கோவில் என்றும் கூறப்படும் நிலையில், அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க..அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம் - 11 மாவட்டங்களில் கனமழை.!!