வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி கொல்லப்பட்டார்? செப்பு பட்டயத்தில் வெளியான உண்மை..

வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் அடங்கிய செப்பு பட்டயம் எட்டயபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Copper inscription of death sentence of Veerapandiya Kattabomman.. Discovered at Ettayapuram

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், செப்பு பட்டயங்கள் பராமரித்து, பாதுகாத்து நூலாக்கம் செய்வதற்காக தமிழக அரசு சுவடி திட்ட பணிக்குழுவை அமைத்துள்ளது. பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையில் 12 பேர் அடங்கிய இந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் செப்பு பட்டயம் ஒன்றை கண்டுபிடித்த்துள்ளனர்.

அதில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கப்பட்டது உள்ளிட்ட பல தகவல்கள் இடம்பெற்றூள்ளன. கோயில் சுவரின் முன்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ள செப்ப பட்டயத்தை ஆராய்ந்த போது இந்த தகவல் கிடைத்துள்ளதாக சுவடி திட்டப்பணி குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ கட்டபொம்மனை கொலை செய்தது குறித்து ஆங்கிலேயர் விளம்பரம் செய்த வரலாற்று தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த செப்பு பட்டத்தயத்தை ஆங்கிலேயரின் ராணுவ படைத்தளபதி மேஜர் பானர் மேன். 20.10.1799-ல் எழுதப்பட்டுள்ளது.

Latest Videos

இதையும் படிங்க : தங்கும் விடுதியில் பெண் சுற்றுலா பயணிக்கு பாலியல் தொல்லை - காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது

அந்த செப்பு பட்டயத்தில் “ ஆங்கிலேயேர் உத்தரவுப்படி திருநெல்வேலி சீமைகளில் எனது பாளையத்த இழக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியான், ஏழாயிரம் பண்ணையான், நாகலாபுரத்தாள், கோலார்பட்டியான், காடல்குடி குளத்தூரான், ஆங்கிலேயரிடம் இருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் நடந்ததால், இவர்களின் பாளையப்பட்டுக்களை ஆங்கிலேயர் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கர், அவருடைய தானாதிபதி சிவசுப்பிரமணி பிள்ளை, நாகாலாபுரத்து பாளையக்காரருக்கு தமையனும், காரியஸ்தனுமான சவுந்திர பாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செப்பேடு மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது..” என்று தெரிவித்தார்.

ஆங்கிலேயரின் உத்தரவுகளை ஏற்க மறுத்ததால் கட்டபொம்மன் கொல்லப்பட்டதாகவும், கட்டபொம்மனுக்கு ஆதரவாக இருந்தவர்களும் கொல்லப்பட்டதாகவும் சுவடி திட்டக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். கட்டபொம்மன் கொல்லப்பட்ட 4 நாட்களுக்கு பிறகு இந்த செப்ப பட்டயம் எழுதப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பீரங்கிகள், வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருப்போருக்கும் தண்டனை விதிக்கப்படும் அந்த செப்பு பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ள ஹூண்டாய்! நாளை கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image