Watch : பழனி மலைக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி வசூல்!

Published : May 10, 2023, 10:38 AM ISTUpdated : May 10, 2023, 10:39 AM IST
Watch : பழனி மலைக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி வசூல்!

சுருக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் நான்கு கோடியே  68 லட்சத்து 98 ஆயிரத்து 887 ரூபாய் கிடைத்துள்ளது.  

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக 26 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியன.

இதையடுத்து  உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.  கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில்  ரொக்கமாக 4,68,98,887 ரூபாய் கிடைத்துள்ளது.   தங்கம் 1,072 கிராமும், வெள்ளி18,611 கிராமும், வெளிநாட்டு கரன்சி 1309 நோட்டுகளும் கிடைத்துள்ளது.



உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல்,  தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

கல்யாணமான 13 நாட்களில் புதுமாப்பிள்ளை விபரீத முடிவு! நெஞ்சில் அடித்து கதறும் குடும்பம்! மனைவி அப்படி என்ன செய்தார்?
தலை தீபாவளி அதுவுமா எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்! இருந்தாலும் ரூபியாவுக்கு இவ்வளவு கோபம் இருக்கக்கூடாது