கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டது: வைகோ காட்டம்

By SG Balan  |  First Published Apr 3, 2024, 9:59 PM IST

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டது என்று மதிமுக தலைவர் வைகோ காட்டமாகக் கூறியுள்ளார்.


கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டது என்று மதிமுக தலைவர் வைகோ காட்டமாகக் கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு மத்தியில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதில் கூறியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டுவது குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதில் கூறிய வைகோ, "அந்த நேரத்தில் அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டது" என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

மதிமுக தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவரே காங்கிரஸ் கட்சியை விமர்சித்துப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

மோடியின் காமெடி டைம்... நிர்மலாவின் வாழைப்பழ காமெடி... : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு

Founder & Alliance Member Vaiko says “ "Congress betrayed Tamil Nadu on every front!”.

Very true sir. We have been telling the same but shamelessly you’re in alliance with them since 2019 betraying the Tamils & Tamil Nadu. pic.twitter.com/iqKiWEx9a9

— Dr.SG Suryah (மோடியின் குடும்பம்) (@SuryahSG)

வைகோவின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வைகோவின் இந்தப் பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள பாஜகவின் எஸ்.ஜி. சூர்யா, "மிகவும் உண்மை சார். நாங்கள் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வெட்கமின்றி 2019ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்த அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள்" என்று விமர்சித்துள்ளார்.

ஒரே நாளில் 430.13 மில்லியன் யூனிட்... புதிய உச்சத்தை எட்டிய தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு!

click me!