கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலை; மாட்டு வண்டியில் திமுக வேட்பாளர் நூதன பிரசாரம்

By Velmurugan s  |  First Published Apr 3, 2024, 7:39 PM IST

பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரச கண்டித்து காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.


மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர் க.செல்வம் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தனி்யார் தொலைக்காட்சி விவாதத்தில் வெடித்த மோதல்; குடும்ப தலைவரை வெட்டி கொன்ற மனைவி, மகன்

Tap to resize

Latest Videos

undefined

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்ஒட்டிவாக்கம் பகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உயர்வை கண்டித்து மாட்டு வண்டிகளில் வீடு வீடாக கிராமம் வழியாக சென்று பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்ய வேண்டி கேட்டுகொண்டார். மேலும் வெற்றி அடைந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மோடி, அமித்ஷா என்ற மோசமான சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - திருமாவளவன் பேச்சு

திமுக வேட்பாளர் வருகையை ஒட்டி 3 டன் எடை கொண்ட ரோஜா பூ மாலை ஜேசிபி இயந்திரம் மூலம் வேட்பாளர் செல்வத்துக்கும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோருக்கு அணிவித்து திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகள் உடன் ஊர்வலமாக வந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டனர்.‌

click me!