வாக்குப்பதிவு நாளில் காலையிலேயே ஓட்டு போட்டுவிடுங்கள்; ஆளும் கட்சியினர் அதை கள்ள ஓட்டாகிவிடுவார்கள் - பிரேமலதா

By Velmurugan sFirst Published Apr 3, 2024, 3:25 PM IST
Highlights

வாக்குப்பதிவு நாளில் காலையிலேயே சென்று மக்கள் வாக்கு செலுத்த வேண்டும், இல்லையென்றால் ஆளும் கட்சியினர் அதனை கள்ள ஓட்டாக மாற்றி விடுவார்கள் என பிரேமலதா தெரிவித்து உள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் களத்தில் இறங்கி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் இராஜசேகரை  ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரேமலதா கூட்டணி கட்சியினர் மத்தியில் பேசுகையில், கச்சத்தீவு பிரச்சினை மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. கலைஞர் மற்றும் இந்திரா காங்கிரஸ் இணைந்து நமது உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அன்று ஆரம்பித்தது தான், மீனவர்களின் பிரச்சினை. திமுக, காங்கிரஸ் கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணம் திமுக, காங்கிரஸ் தான்.

மோடி, அமித்ஷா என்ற மோசமான சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - திருமாவளவன் பேச்சு

எல்லா பிரச்சனைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் தான் காரணம். இந்த தேர்தலில் இந்த கூட்டணியை மகத்தான வெற்றி பெற வையுங்கள். 19ம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று காலையிலேயே சென்று வாக்களித்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாக்கு காள்ள ஓட்டாக மாறிவிடும். இன்று திமுக ஆட்சி பலம், அதிகார பலம், பணபலத்தை வைத்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு உருவாக்கி எல்லா தொகுதியிலும் வெற்றி பெற அனைத்து வன்முறைகளையும், கட்டவிழ்த்துவிட தயாராக இருக்கிறார்கள். 

பாஜக ஒரு வாஷிங் மெஷின் ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து தூய்மையாக்கிவிடுவார்கள்; பிடிஆர் விமர்சனம்

இந்த படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் . தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம்லதா விஜயகாந்த் பிரச்சார மேற்கொண்ட நிலையில் ஏராளமான தேமுதிக,, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

click me!