கணினி பயிற்றுநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ

By Thanalakshmi V  |  First Published Oct 28, 2022, 1:14 PM IST

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.15 ஆயிரம் மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இது குறித்து சேலம்‌ மாவட்ட ஆட்சியர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌, சேலம்‌ மாவட்டத்தில்‌
செயல்பட்டு வரும்‌ செவித்திறன்‌ குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்‌ பள்ளியில்‌ கணினி பயிற்றுநர்‌ பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில்‌ பணிபுரிய விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

Tap to resize

Latest Videos

இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்‌. அதிகபட்ச வயதுவரம்பில்லை. பி.எட்‌ தகுதியுடன்‌ பி.இ(கணினி அறிவியல்‌) அல்லது பி.எஸ்சி(கணினி அறிவியல்‌) அல்லது பிசிஏ அல்லது பி.எஸ்சி(தகவல்‌ தொழில்நுட்பம்‌) ஆகியவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்றை முடித்திருக்க வேண்டும்‌.

மேலும் படிக்க:மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

மாதம்‌ ரூ.15 ஆயிரம்‌ தொகுப்பூதியமாக வழங்கப்படும்‌. தகுதியானவர்கள்‌ தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்‌, செவித்திறன்‌ குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்‌ பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம்‌, சேலம்‌ - 636005 என்ற முகவரியில்‌ நவம்பர்‌ 10 ஆம்‌ தேதி மாலை 5 மணிக்குள்‌ அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களுடன்‌ அளிக்க வேண்டும்‌ என
தெரிவித்துள்ளார்‌.
 

click me!