
கன்னியாகுமரி திமுக ஒன்றிய பிரதிநிதி இன்பம் என்பவரது விசைப் படகில் டிரைவாக பணிபுரிந்து வருகிறார் சகாய வினோ. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை பொறுத்தவரை படகின் உரிமையாளர்கள், அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முன்பணம் கொடுத்து தங்களது படகில் வேலைக்கு எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் சகாய வினோ, திமுக பிரமுகர் இன்பம் விசைப் படகில் டிரைவராக பணிபுரிய முன்பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இன்பம் விசைப்படகு நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில், அதனை ஓட்டிச் சென்ற சகாய வினோவிற்கு முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:நீ பூணூல் மட்டும் தான் அறுப்ப! நான் இரண்டையும் சேர்த்து அறுத்துவிடுவேன்! சுப. வீக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை
சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த சகாய வினோ மீண்டு பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால் முதுகு தண்டில் வலி ஏற்படவே, இரு வாரம் வேலைக்கு செல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனால் படகை செலுத்த முடியமால் இருந்ததால் ஆத்திரத்தில் கடந்த இரு தினங்கள் முன்பு சகாய வினோ வீட்டிற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த இன்பம், தான் வழங்கிய முன்பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சகாய வினோ மற்றும் அவரது மனைவியை ஆபாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமில்லாமல், தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த சகாய வினோ, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர், தாக்குதலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் தன்னை மிரட்டுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் படிக்க:மீன் பிடிப்பதில் தகராறு; தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி வெட்டிக் கொலை!!
இந்நிலையில் தற்போது வீடு புகுந்து திமுக பிரமுகர் இன்பம் தாக்குதல் நடத்துவது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக மயிலாடுதுறையில் நிலபிரச்சனை தொடர்பாக சமரசத்தில் ஒத்துழைப்பு கொடுக்காத ஆத்திரத்தில், மருத்துவர் மற்றும் அவரது தாயார் திமுக நிர்வாகி தாக்குதல் நடத்துவது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.