கொடநாடு கொலை வழக்கு..! டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு - உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு

By Ajmal Khan  |  First Published Oct 28, 2022, 12:16 PM IST

கொடநாடு கொலை வழக்கு உதகை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 


கொடநாடு கொலை வழக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான 950 எக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் பங்களா கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்குள்  நுழைந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. அத்துடன் பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய், ஜெம்சீர் அலி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

சிபிசிஐடி விசாரணை

இந்த கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தின் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேபோல் இரண்டாவது குற்றவாளியாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த சாயன்  குடும்பத்துடன் கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் போது மர்ம வாகனம் மோதியதில் சாயன் மனைவி மற்றும் அவரது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தனர். காயங்களோடு சயான் உயிர் தப்பினார்.  இதனையடுத்து இந்த வழக்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில் நடைபெற்றது.  கடந்த 8 மாதத்திற்கு மேலாக சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,  கோடநாடு எஸ்டேட்  தற்கொலை செய்து கொண்ட கணினி பொறியாளர் உட்பட 316 சாட்சங்களிடம் மேற்கொண்ட விசாரணை நடைபெற்றது. 

பசும்பொன் குருபூஜைக்கு செல்லாத இபிஎஸ்..! கெத்து காட்ட தொண்டர்களோடு களம் இறங்கும் ஓபிஎஸ்

டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இதனை தொடர்ச்சியாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட ஆவணங்களை தனிப்படை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் உதகையில் விசாரணை நடத்தினார். இதனையடுத்து இன்று கொடநாடு கொலை வழக்கு தொடர்பான விசாரணை இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்றது.  அப்போது சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதால் அரசு  தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

நீ பூணூல் மட்டும் தான் அறுப்ப! நான் இரண்டையும் சேர்த்து அறுத்துவிடுவேன்! சுப. வீக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை
 

click me!