தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், விசாரணை அமைப்பிற்கு ஒத்துழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சாதாரண குடிமக்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இது திமுகவின் நாடகம்... விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பது செந்தில் பாலாஜியின் கடமை என்று பாஜகவினர் கூறிவருகின்றனர்.
undefined
டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி.? அமலாக்கத்துறையின் திட்டம் என்ன.?
இந்நிலையில், செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியுங்கள். அதுதான் திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியுள்ளார். கட்சியினரை சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கச் சொல்லுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பது பழிவாங்கும் செயல் என்றும், இதேபோல மேற்கு வங்கம், டெல்லி போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் மத்திய அரசு இப்படிப்பட்ட தவறான செயல்களை செய்துவருகிறது என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காவலில் எடுத்தனர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்த பின்பு பேட்டி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு, செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார் எனவும் கண் திறந்து பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரது காதுக்கு அருகில் வீக்கம் காணப்பட்டதாவும் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியைச் சந்திக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளிகியாகியுள்ளது.