திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தற்கொலை.. வீட்டின் உரிமையாளர் தான் காரணமா..? என்ன நடந்தது..? பகீர் தகவல்

By Thanalakshmi V  |  First Published Oct 28, 2022, 11:03 AM IST

திருவேற்காட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவி தற்கொலைக்கு முன்னதாக போலீசிடம் பேசியதாகவும் தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.  
 


திருவேற்காடு கருமாரியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் உதயகுமார் - உமா தம்பதியினர். இவர்களுக்கு 19 வயதில் ஸ்ரீமதி என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். சென்னையில் தனியார் கல்லூரியில் ஸ்ரீமதி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் எழுந்த உமா, தனது மகளை எழுப்ப அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீமதி சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மகளை பிடித்து கதறி அழுதார்.

Latest Videos

மேலும் படிக்க:மேட்டூரில் பயங்கரம்.. அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி தலை துண்டிப்பு.. பகீர் சிசிடிவி காட்சி.!

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உடலை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், “ தனது மகளின் தற்கொலைக்கு ஏற்கனவே நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் தான் காரணம். திருவேற்காடு சிவசங்கர் நகர் பகுதியில் வினோத் ரேவதி தம்பதியினரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தோம். அப்போது குடும்ப வறுமை காரணமாக ரேவதியிடம் இருந்து 2 பவுண் தங்க நகை வாங்கி அடகு வைத்து இருந்ததோம்.

மேலும் படிக்க:சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு... சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு..!

இந்நிலையில் அங்கிருந்து வேறு வீட்டிற்கு மாறி இருந்து வரும் நிலையில், ரேவதியின் கணவர் வினோத், தாங்கள் 7 சவரன் நகை வாங்கி அடகு வைத்திருப்பதாகவும் அதனை உடனடியாக திருப்பி தருமாறு வீட்டிற்கு வந்த தகராறு செய்தார். ஆனால் நாங்கள் 2 சவரன் மட்டுமே வாங்கியதாக கூறியதால், எங்கள் மீது திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் 

இதனையடுத்து புகாரின் பேரில் குடும்பத்தில் அனைவரையும் காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக எனது மகள் மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, எனது மகள் போலீஸ் ஒருவரிடம் செல்போனில், தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி பேசினார். அதன் பிறகே அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

எனவே தனது மகள் செல்போனில் பேசிய காவல் அதிகாரி யாரென்றும் விசாரிக்க வேண்டும். தற்கொலை காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

click me!