பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற இளைஞர்... மருத்துவர்கள் அதிர்ச்சி!!

By Narendran S  |  First Published Oct 28, 2022, 12:28 AM IST

தேனியில் தன்னை கடித்த பாம்புடன் இளைஞர் ஒருவர் மருத்துமனைக்கு சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


தேனியில் தன்னை கடித்த பாம்புடன் இளைஞர் ஒருவர் மருத்துமனைக்கு சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தைச் சேர்ந்த இளைஞர் விவேக். 25 வயதான இவர் தேவாரம் பகுதியில் கட்டிட கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில்  கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த விவேக் சிமெண்ட்  கல்லை தூக்கும் பொழுது அதில் மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு அவரது வலது கையை கடித்துள்ளது.

இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு விவகாரம்... கைதான 6வது நபருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!!

Tap to resize

Latest Videos

undefined

இதனால் அலறி அடித்து கொண்டு ஓடிய விவேக்கை கண்ட உடன் வேலை செய்பவர்கள் அவரைக் கடித்த பாம்பை பிடித்து அதையும் விவேக்கையும் போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாம்புடன் சிகிச்சைக்காக வந்த நபர்களைக் கண்டு மருத்துவர்களும் செவிலியர்களும் அச்சமடைந்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தமிழகத்தில் சேவை மனப்பான்மையுடன் நிறைய பேர் உள்ளனர்… ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!!

துரிதமாக செயல்பட்டு விவேக் உடன் வேலை பார்த்த நபர்கள் உரிய நேரத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றதால்  விவேக் உயிர் தப்பினார். தன்னை கடித்த பாம்புடன் ஒருவர் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் மருத்துவர் உட்பட அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

click me!