தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை.. ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பிய வனத்துறை..!

By Raghupati RFirst Published Oct 21, 2022, 6:11 PM IST
Highlights

மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக  தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கைலாசப்பட்டி கிராமத்தின் அருகே சொர்க்கம் கோம்பை பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தின் பாதுகாப்புக்காக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தோட்டத்தில் ஆட்டு கிடை அமைக்கப்பட்டு இருந்தது.

கடந்த மாதம் 28ம் தேதி தோட்டத்தில் ஒரு சிறுத்தை செத்து கிடந்தது. இதையடுத்து அந்த சிறுத்தை அங்கே எரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணையை துவங்கினர்.

இதையும் படிங்க..உணவளித்தவருக்கு கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்திய குரங்கு.. நெகிழ வைத்த சம்பவம் - வைரல் வீடியோ!

இந்த விசாரணையை தொடர்ந்து தோட்டத்திற்குள் ஆட்டுக்கிடை அமைத்து தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் தங்கவேல், ராஜவேல் ஆகியோரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்.பி ரவீந்திரநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..தீபாவளி விடுமுறையில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம், அதுவும் குறைந்த செலவில்! எங்கு தெரியுமா ?

இந்நிலையில், சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள நில உரிமையாளர்கள் என மூன்று பேருக்கு வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுபபினர் என்பதால் மக்களவை சபாநாயகரிடம் அவரை விசாரிக்க வனத்துறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.

இதன்படி, சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி ரவீந்திரநாத் எம்.பி உள்பட மூன்று பேரில் 2 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

click me!