சிறுத்தை விவகாரத்தில் OPS மகனுக்கு சிக்கல்.. மக்களவை சபாநாயகருக்கு கடிதம்.. வஞ்சம் வைத்த தங்க தமிழ் சல்வன்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 15, 2022, 12:24 PM IST

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மாவட்ட வன அலுவலர் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மாவட்ட வன அலுவலர் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை திமுக  மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம், கோம்பை வனப்பகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

Latest Videos

undefined

இதில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் ரவிந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை அடித்து உதைத்து கைது செய்தனர்.

மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தின் மேலாளர்கள் ராஜவேல், தங்கவேல் என்ற இருவரையும் கைது செய்தனர். தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தை உயிரிழக்க காரணமாக இருந்தது தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத்தான்.

இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் இந்திக்கு எதிராக திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!!

ஆனால் அவரை விட்டு தோட்டத்தில் மேலாளர்களை கைது செய்வது, ஆட்டுக் கிடை மடக்கியவரை கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ரவிந்திரநாத்தை கைதுசெய்வதற்கு அஞ்சி அதில் இருந்த தப்பிக்க வனத்துறை அதிகாரிகள் ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தது கண்டனத்திற்குரியது என  குற்றம் சாட்டினார்.

இந்நிலையில்தான் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்டோர் சிறுத்தை உயிரிழப்புக்கு காரணமான எம்பி ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தேனி மாவட்ட வன அலுவலரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதையும் படியுங்கள்: இந்தியை திணிக்க மீண்டும் முயற்சித்தால் டெல்லிக்கே வந்து போராடுவோம்.. அமித்ஷாவை எச்சரித்த உயதநிதி.

தற்போது இது ஓபிஆருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே  தங்கத் தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ் நேரடி அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தங்க தமிழ்ச் செல்வன் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன், தோட்டத்தில் சிறுத்தை இறந்ததற்கு ரவிந்திரநாத் கைது செய்யப்படுவாரா இல்லை ஒன்றிய அரசு குறுக்கிட்டு காப்பாற்றபடுவாரா?

ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை இறந்ததற்கு தோட்டத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்துள்ளோம், தேனி மாவட்ட வன அலுவலர் எங்களின் கோரிக்கையை ஏற்று ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எனவே மக்களவை சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தி உள்ளார். மக்களவை சபாநாயகர் முடிவை பொறுத்தே ரவீந்திரநாத் மீது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!