தேனி மாவட்டம் கம்பத்தில் களை கட்டிய இரட்டை மாட்டுவண்டி பந்தயம்!! 

By Dhanalakshmi G  |  First Published Oct 12, 2022, 6:50 PM IST

தேனி மாவட்டம் கம்பத்தில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. 150- க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கெண்டன.


கம்பத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய  மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  

இந்தப் போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதில் மாடுகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கை தட்டினர். இந்த மாட்டு வண்டி பந்தயம் தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.  

Latest Videos

undefined

சேலம் - கோவை தினசரி பயணிகள் ரயில்.. 18 நாட்களுக்கு ரத்து.. என்ன காரணம் தெரியுமா..?

வீட்டில் ”மசாஜ் சென்டர்” பெயரில் பாலியல் தொழில்.. களமிறங்கிய போலீசார்.. சிக்கிய இடைத்தரகர்கள்..

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. முதல் கொடி வாங்கிய சாரதிக்கு குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.  போட்டியானது கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வரை சுமார் 8 கிலோமீட்டார் தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

click me!