வீட்டில் ”மசாஜ் சென்டர்” பெயரில் பாலியல் தொழில்.. களமிறங்கிய போலீசார்.. சிக்கிய இடைத்தரகர்கள்..

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மசாஜ் சென்டர் எனும் பெயரில் அப்பாவி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இடைதரகர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
 

Two Mediators arrested near Chennai for sex business in the name of massage center

சேலையூரில் அன்னை சத்யா நகர் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக பள்ளிக்கரணை விபச்சார தடுப்பு பிரிவு  போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, சந்தேகத்திற்குள்ளான வீட்டில் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியான நிலையில், அங்கிருந்த இடைத்தரகரான வினோத் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற மூன்று இளம் பெண்களை மீட்கப்பட்டனர். 

மேலும் படிக்க:2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டை கடந்த மூன்று மாதங்களாக வாடகைக்கு எடுத்து மஜாஜ் சென்டர் எனும் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் மீட்கப்பட்ட பெண்கள் ஆகியோர் சேலையூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இடைத்தரகர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் விடப்பட்டனர்.மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி விஜயை சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க:bonus railway 2022: ஜாக்பாட்! ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios