மார்ச் 17ம் தேதி பிளஸ் 1 மாணவர் வகுப்பறையில் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்ததால் கண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர் குடிபோதையில் கத்தியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
ஆசிரியரை பள்ளி மாணவர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து பாதுகாப்பு வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவன்
undefined
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள வைகை அணைச் சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தேவதானப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 900 பேர் படித்து வருகின்றனர். 40க்கும் அதிகமான ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளனர். இந்நிலையில், மார்ச் 17ம் தேதி பிளஸ் 1 மாணவர் வகுப்பறையில் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்ததால் கண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர் குடிபோதையில் கத்தியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிப்புரண்டு மனைவியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?
ஆசிரியருக்கு கொலை மிரட்டல்
அப்போது, ‘ஏறுனா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா பெயிலு. என்ன யாரும் ஒன்னும் செய்ய முடியாது’ என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தேனி மாவட்ட அரசுப் பள்ளிகளில் நிலவும் இந்த அசாதாரண சூழலைக் கண்டித்தும், தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையீடு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சும் வகையில் சேசிங்.. காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து எறிந்த தந்தை.. ஐசியூவில் காதலன்
ஆசிரியர்கள் போராட்டம்
பின்னர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை அழைத்து முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் பேச்சுவார்த்தை நடத்தி விவரங்களைக் கேட்டறிந்தார். இதையடுத்து காரணமே இல்லாமல் ஆசியர்களைத் தாக்குவது மட்டுமல்லாமல் ஆயுதங்களைக் காட்டியும் அச்சுறுத்துகின்றனர். இதன் காரணமாக பள்ளிக்குச் செல்லவே ஆசிரியர்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் முறையிட்டுள்ளோம்" என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.