தேனி பெரியகுளம் பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு தடை போட்ட நீதிமன்றம்.. நீதிபதி அதிரடி உத்தரவு

By Raghupati R  |  First Published Oct 15, 2022, 5:03 PM IST

அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவு ஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தினையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது என்று நீதிபதி நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் கூறியிருக்கின்றனர்.


தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் உக்கடை வாய்க்கால் பாதையில் இருந்து கைலாசநாதர் கோயில் ரோடு குறுக்கே கட்டப்படும் உயர் மட்ட பாலம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகுமார் குருசாமி தினகரன் முரளி ரேணுகா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கினை விசாரனை செய்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,  அரசு தரப்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பாலம் அமைப்பது தொடர்பாக கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..Raid : தீபாவளி வசூல் வேட்டையில் அரசு அதிகாரிகள்.. சாட்டையை சுழற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை - ‘பரபர’ ரெய்டு !

இதனைத் தொடர்ந்து நீதிபதி அரசு தரப்பில் ஒரே மாதிரியான திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் பொருந்தும் என்பது போல் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மனுதாரர் வழங்கிய மனுவிற்கு இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. எனவே, லட்சுமிபுரம் ஒரே கிராமத்திற்கு மட்டும் விளக்கு அளிக்க இயலாது என தெரிவித்து மனுவினை நிராகரித்துள்ளனர் இது ஏற்புடையதல்ல.

விவசாயிகளின் அச்சம் என்னவென்றால் கைலாசநாதர் கோவில் சாலை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உள்ளது. தற்பொழுது கட்டப்பட்டு வரும் பாலம்  இதற்கு குறுக்கே அமைக்கப்படுகிறது. இதனால் தங்களது பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் பாதை பாதிக்கப்படும். இதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கும் விவசாயம் மேற்கொள்வதற்கும் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் செல்வதற்கும் பாதிப்பு ஏற்படும்.

இது அவர்களின் உரிமைகளை பாதிக்கும் விதமாக அமைகிறது. எனவே விவசாயிகள் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்தப் பகுதி மக்களை இணைக்காமல் அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அது வெற்றி அடையாது. மேலும் அந்தந்த கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்குமே அவர்களுக்கு எது சிறந்தது என்று நன்றாகத் தெரியும். அதிகாரிகள் தாங்களே சிறந்த அறிவு ஞானம் கொண்டவர்கள் என எண்ணி எந்த ஒரு திட்டத்தினையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது.

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்களிடம் எந்த விதமான கருத்தையும் கேட்காமல் அதிகாரிகள் மனுதாரர்கள் வழங்கிய மனுவினை இது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்ற அடிப்படையில் மட்டுமே நிராகரித்துள்ளனர். எனவே மனுதாரர்கள் தமிழக அரசிடம் இது குறித்து மனு அளித்து மனு குறித்தான விசாரணை மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறையினர்  மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் தேனி மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் லட்சுமிபுரத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை பாலம் கட்டும் பணிக்கு வெளியிடபட்ட உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க..எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

click me!