Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

Published : Oct 28, 2022, 08:00 AM IST
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்றும், இந்த பணிகள் விரைவாக முடிவடைந்தால் முன்னதாக மின் தடை நீக்கப்படும் என்றும் மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

தாம்பரம் : 

ஜல்லடையன்பேட்டை, பெரும்பாக்கம், கைலாஷ் நகா், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு, பள்ளிக்கரணை, தர்மலிங்க நகர், விவேகனந்தா நகர், மீனாட்சி நகர், அம்பேத்கர் தெரு, கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் நனர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

அரும்பாக்கம்:

 மேத்தா நகர், ஸ்கைவாக், அய்யாவு காலனி, விஜிஏ நகா், எம்.எம்.டி.ஏ காலனி ‘எ‘ முதல் ‘ஆர்‘ பிளாக் வரை, அசோக் நகர், வீரபாண்டிய நகர், சூளைமேடு சக்தி நகர் 1 முதல் 5-ஆவது தெரு, மாணிக்கம் ரோடு, அப்துலா தெரு கோடம்பாக்கம் பஜனை கோயில் 3 மற்றும் 4-ஆவது தெரு, அழகிரி நகர், தமிழா வீதி, கங்கை அம்மன் கோயில் தெரு, லட்சமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மணலி:

சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், நெடுஞ்சாழியன் சாலை, எடப்பாளையம், பிள்ளைபுரம், விமலாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!