சென்னையில் போக்குவரத்து விதி மீறல்... ஒரே நாளில் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்!!

By Narendran S  |  First Published Oct 27, 2022, 5:00 PM IST

போக்குவரத்து விதி மீறியதாக சென்னையில் ஒரே நாளில் 2500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 லட்சம் ரூபாய் அபாராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 


போக்குவரத்து விதி மீறியதாக சென்னையில் ஒரே நாளில் 2500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 லட்சம் ரூபாய் அபாராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அன்மைக்காலங்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பொக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகைகளை உயர்த்தி தமிழக அரசு புதிய  அரசாணையை  வெளியிட்டது.

அதன்படி,  ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது, வழிவிட தவறினால்  10 ஆயிரம் ரூபாயும், சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரமும் என  அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்..? வெளியான முக்கிய தகவல்..

அத்துடன் மது அருந்திருவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் என அனைத்து விதமான போக்குவரத்து விதி மீறல்களுக்கும் அபராதம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த புதிய அபராத முறை  நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் அனைத்து சிக்னல்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளிடம் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் முக்கிய அபராத கட்டணங்களை பதாகைகளில் எழுதியும் மற்றும் துண்டு அறிக்கைகள் விநியோகம் செய்தம் விழிப்புணர்வு செய்தனர்.

undefined

இதையும் படிங்க: நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

மேலும் சென்னையில் அண்ணாசாலை, காமராஜர்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி சாலை, வடபழனி 100 அடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் என 150 இடங்களில் போலீசார் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதித்து அதை வாகன ஓட்டிகளிடம் வசூலித்தனர். அதன்படி ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  மொத்தம் ரூ. 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

click me!