ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசு தலைவரிடம் பரிந்துரைந்துள்ளார்.
இதனையடுத்து இதற்கு எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க:ஜெ. இறந்த தேதியில் கோல்மால்.. அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்.. தவறுக்கு மேல் தவறு செய்த சின்னம்மா.?
இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் தூத்துக்குடி அரசு உதவிப்பெறும் வ.உ.சி கல்லூரி மாணவி - மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறகணித்து, இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் மாணவர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும் ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் ஏதும் அசம்பாவிதங்கள் நேரமால், காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க:லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி ஆய்வாளரை ஏமாற்றிய மோசடி மன்னன்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்