என்ன நடக்குதுன்னே தெரியலயா… கலெக்டரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த மக்கள்!

By manimegalai aFirst Published Sep 15, 2018, 2:31 PM IST
Highlights

நெல்லையில் நேற்று முன்தினம் இரவு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் காரணமாக செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் நேற்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஷில்பா பிரபாகரன் அறிவித்தார். 

நெல்லையில் நேற்று முன்தினம் இரவு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் காரணமாக செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் நேற்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஷில்பா பிரபாகரன் அறிவித்தார். அதில், இன்று காலை 6 மணி வரை 144 தடை இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரை தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் நேற்று இரவு செங்கோட்டையில் ஒரு வீட்டின் மீது, பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இதனை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பொது வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் கலெக்டர் ஷில்பாவும் உள்ளார். இன்று அந்த வாட்ஸ்ஆப் குழுவில் ஒருவர், செங்கோட்டையில் சுப்பையா என்பவரது வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த குழுவில் இருக்கும் கலெக்டர் ஷில்பா, உடனடியாக எப்போது என கேட்டுள்ளார். இது இந்த குழுவில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நேற்று இரவு நடந்த சம்பவத்தை கலெக்டர் எப்போது நடந்தது என கேட்டதால், மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்றேம் தெரியாமல் கலெக்டர் இருக்கிறாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்,
    

click me!