கோவை | ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையின் சிறப்பு தொழுகை ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு !

கோவை | ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையின் சிறப்பு தொழுகை ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு !

Published : Mar 20, 2026, 01:02 PM IST

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை தெரிந்த பிறகு ஜாக் அமைப்பினர் இந்த ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதன்படி சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ஜாக் அமைப்பினர் புத்தாடைகள் அணிந்து ரம்ஜான் சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜாக் அமைப்பினர் ரம்ஜான் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டனர். இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது. சரியாக ஏழு மணிக்கு தொழுகை துவங்கியது. தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இல்லங்களுக்கு செல்லும் அவர்கள் உற்றார் உறவினர்களுடன் உணவுகளை பரிமாறி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..
03:01மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன? |
03:07கூட்டங்கள் வாக்குகளாக மாறாது.. ஏம்பா இத்தனை லைவ் எடுக்குறீங்க... கடுப்பா பேசிய செந்தில பாலாஜி
01:52நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!
02:57சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport
01:51'விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech
02:28Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!
02:26அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
03:06TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!
02:02திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay