தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்... நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

By Narendran SFirst Published Nov 7, 2022, 9:28 PM IST
Highlights

தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக கடந்த 5 ஆம் தேதி தலைமன்னார் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 2 விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 14 வயது சிறுவன் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல... முத்தரசன் கண்டனம்!!

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.  மேலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!