சென்னையில் எப்பேர்ப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் வடிகால் பணிகள்.. முதலமைச்சர் திட்டவட்டம்

By Thanalakshmi V  |  First Published Oct 8, 2022, 2:42 PM IST

மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 15 முதல் 30 நாள்களில் முடிவடையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று அவர், சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் மற்றும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். 
 


பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 46 மீட்டர் நீளத்திற்கும் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், ரிப்பன் கட்டடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 600 மீட்டர் நீளத்திற்கும் 

Tap to resize

Latest Videos

அதே போல் சென்னை செண்டரல் முதல் மூலக்கொள்ளதம் வரை 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4600 மீட்டர் நீளத்திற்கும்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் எட்டு குறுவடிகால்கள் மற்றும் மூன்று அணுகு கால்வாய்கள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி பேசின் பாலத்திற்கு அருகில் வடக்கு பக்கிங்காம் கால்வாயில் தூர்வாரும் பணிகளும் டெமலஸ் சாலை,  முனுசாமி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 725 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க:8, 12, டிகிரி படித்தவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறையில் அரசு வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.

புளியாந்தோப்பு நெடுஞ்சாலையில் 790 மீட்டர் நீளத்திற்கும் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 600 மீட்டர் நீளத்திற்கும் கொளுத்தூர் தொகுதியில் 92 சாலைகளும் வேலவன் நகர் பகுதியில் பேப்பர் மில்ஸ் சாலை (பேருந்து தட சாலை) சந்திப்பில்  485  மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்  அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கொளத்தூரில் வீனஸ் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் தானியங்கி நீர் இரைப்பான் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. சென்னை மாநகரில் மொத்தம் 167.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க:கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து பணிகளையும் முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார்.  இப்பணிகள் அனைத்தையும் அக்டோபர் மாதத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி செய்கின்றன. இன்னும் 15 முதல் 30 நாட்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும். பெரும்மழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிப்படைகின்றன. எப்படிப்பட்ட மழைவந்தாலும் அதை சமாளிக்கக்கூடிய அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு , சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

மேலும் படிக்க:திருக்குறள் பற்றி ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது - வைகோ குற்றச்சாட்டு


 

click me!