அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்... சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

Published : Jan 13, 2023, 05:34 PM IST
அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்... சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சுருக்கம்

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை உண்டா? அமைச்சர் பதில்

இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 இலட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக தொண்டனாக கூட இருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ் தொண்டனாக மட்டும் இருக்கக் கூடாது..! திருமாவளவன் ஆவேசம்

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!