ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை உண்டா? அமைச்சர் பதில்

By Velmurugan sFirst Published Jan 13, 2023, 4:47 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகக்கு பதிலாக கண் கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ள நிலையில், இலவச வேட்டி, சேலை குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகளை குறைக்கும் பொருட்டு கை ரேகையை பயன்படுத்தி பயனாளர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், பலருக்கும் கைரேகை வைத்து பொருட்களை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் கல்வி தலைகீழாக மாறும் - அண்ணாமலை பேச்சு

Latest Videos

குறிப்பாக வயல் வேலைகளுக்கு செல்லும் நபர்களின் கைரேகை பதிவு செய்வதில் சிரமம் உள்ளது. இவற்றை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழியை பயன்படுத்தி பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் சோதனை முயற்சியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் ஒரு கடையிலும், பெரம்பலூரில் ஒரு கடையிலும் கண் கருவிழியை பயன்படுத்தி பொருள் விநியோகிக்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் காதலனை மிரட்டி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

மேலும் உணவு பொருட்கள் வீணவதை தவிர்க்கும் பொருட்டு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டில் விநியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து கெள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!