புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் கல்வி தலைகீழாக மாறும் - அண்ணாமலை பேச்சு

By Velmurugan s  |  First Published Jan 13, 2023, 4:10 PM IST

ஆட்சியாளர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தாலும் 10 ஆண்டுகளில் அது கொண்டுவரப்பட்டு குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும் என நெல்லையில் நடந்த பள்ளி விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கல்வித்துறையில் தினம் தினம் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

காஞ்சிபுரத்தில் காதலனை மிரட்டி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

Tap to resize

Latest Videos

undefined

குழந்தைகளுக்கு பெற்றோர் ஆசிரியராக இருக்க முடியவில்லை என்ற கவலை தனக்கும் உள்ளது. அரசியலில் முழு நேர வேலை இருப்பதால் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து எதையும் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. புதிய கல்விக் கொள்கையால் கல்வி தலைகீழாக மாற்றப்படும். குழந்தைகளின் திறமைகளை அழிக்கும் ஆங்கிலேயர் கொண்டு வந்த மெக்காலே கல்விக் கொள்கையை ஒழித்து புதிய கல்வி கொள்கையை மோடி கொண்டு வந்தார். 

மதிப்பெண்களில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. ஆட்சியாளர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தாலும் அது கொண்டுவரப்பட்டு இன்னும் பத்து ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும். நடிகராக வரவேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றினால் அவரின் தனித்திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகராக முடியும். 

இளமை திரும்புதே; பொங்கல் விழாவில் குத்தாட்டம் போட்ட கவுன்சிலர்கள், அரசு ஊழியர்கள்

இசையில் ஆர்வம் இருந்தால் புதிய கல்விக் கொள்கையால் இசைஞானி ஆகலாம். மதிப்பெண் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள் என்பது தான் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம். நல்ல குடிமகனாக வர வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. விஐபி கலாசாரம் என்பதே பள்ளியில் இருந்து தான் வருகிறது. அதை அனைத்து பள்ளிகளிலும் உடைத்து மாணவர்களை நல்ல மனிதர்களாக, குடிமகன்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் குழந்தைகளை மாற்றுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதை ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டும் என்று பேசினார்.

click me!