மூட்டை மூட்டையாய் லாரியில் கொண்டு வந்த வெண்டைக்காயை சாலையில் கொட்டி.. விவசாயி கதறல்..!

By vinoth kumar  |  First Published Dec 2, 2022, 1:12 PM IST

வெள்ளப்பநேரி கிராமத்தில் வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்து நெல்லை பகுதியில் உள்ள மொத்த காய்கறி சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.


போதிய விலை இல்லாததால் மனமுடைந்த விவசாயி வேனில் கொண்டு வெண்டைக்காயை மூட்டை மூட்டையாய் சாலையில் கொட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளப்பநேரி கிராமத்தில் வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்து நெல்லை பகுதியில் உள்ள மொத்த காய்கறி சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், மொத்த காய்கறி சந்தைகளில் வெண்டைக்காய்க்கு உரிய விலை இல்லாததால் கொண்டு வந்த காய்களை விவசாயி ஒருவர் சாலையில் மூட்டை மூட்டையாக கொட்டி செல்லும் காட்சிகள் சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு விளைவிக்கும் காய்கறிகளை ஆடு, மாடுகளுக்கு கொட்டி விட்டு வருவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், எனவே காய்கறிகளுக்கு அரசு விரைவில் நிலையான  நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். 

click me!