தென்காசியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இன்று பேரணி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கினார்.
இதையும் படிங்க: மனுஸ்மிருதி பிரதியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய திருமா.! ஆர்எஸ்எஸ் பேரணியை எதிர்ப்பது ஏன்..! புதிய விளக்கம்
இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கி வருகின்றனர். இதற்கிடையே தென்காசியில் பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகங்கம் வழங்கிய விசிகவினர் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான். இணைப்புக்கான பேச்சுக்கே இடம் இல்லை- ஓபிஎஸ்யை அலற வைத்த இபிஎஸ்
இதேபோல் மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகத்தை வழங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகத்தை மக்களுக்கு வழங்க திட்டமிட்டு அதனை தொண்டர்களுக்கும் தெரிவித்தார். அதன்படி, இன்று விசிகவினர் சார்பில் அனைத்து மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழங்கி வருகின்றனர்.