வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள்.. துடிதுடிக்க கொன்ற தாய்.. இறுதி அவர் என்ன செய்தார் தெரியுமா?

Published : Nov 24, 2022, 11:51 AM ISTUpdated : Nov 24, 2022, 11:54 AM IST
வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள்.. துடிதுடிக்க கொன்ற தாய்.. இறுதி அவர் என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி.  லாரி டிரைவர். இவரது மனைவி ஆறுமுகக்கனி. இவர்களது மகள் அருணா (19). கோவையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனால், விடுமுறை எடுத்து கொண்டு அருணா சொந்த ஊருக்கு வந்தார். 

காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி.  லாரி டிரைவர். இவரது மனைவி ஆறுமுகக்கனி. இவர்களது மகள் அருணா (19). கோவையில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனால், விடுமுறை எடுத்து கொண்டு அருணா சொந்த ஊருக்கு வந்தார். 

இதையும் படிங்க;- சரக்கடிக்க பணம் தர மாட்டேனு சொன்ன மனைவி.. தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்! கணவர் பகீர் வாக்குமூலம்

அப்போது, நான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அருணா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரே கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆறுமுகக்கனி மகள் என்றும் பாராமல் துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர், தாய் ஆறுமுகக்கனி விஷம் குடித்துள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது மகள் சடலமாகவும், தாய் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளார்.

இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்க வீட்டுக்கு வந்த போது கள்ளக்காதலி வேறு ஒருவருடன் நெருக்கம்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி..! 

இதனையடுத்து, ஆறுமுகக்கனியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க;-  உல்லாசமாக இருந்த போது பெவிகுவிக்கை ஊற்றிய சாமியார்! ஆணின் மர்ம உறுப்பு துண்டிப்பு! பெண்ணின் உறுப்பிலும் வெட்டு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்