சென்னை புழல் அருகே கோர விபத்து : சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரி***...! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி!

சென்னை புழல் அருகே கோர விபத்து : சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரி***...! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி!

Published : Jul 12, 2026, 12:02 PM IST

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். மென்பொருள் நிறுவன ஊழியரான விக்னேஷின் 3வயது மகன் ஷாருக்ஈஸ்வரன். சனிக்கிழமை மாலை விக்னேஷ் தனது 3 வயது மகனை அருகே உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீடு திரும்ப முற்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதான சாக்கடை திட்ட பணிகளுக்காக ராட்சத தொட்டி மற்றும் ராட்சதக் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரேன் மூலம் ராட்சத இரும்பு தகடு மேலே தூக்கப்பட்ட பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த ரோப் அறுந்து ராட்சத இரும்பு தகடு கீழே விழுந்தது. அப்போது அவ்வழியே சாலையில் மகனை பிடித்து கொண்டு அழைத்து வந்த தந்தை, மகன் இருவர் மீது விழுந்ததில் விக்னேஷ் நூலிழையில் உயிர்தப்பிய நிலையில் 3 வயது சிறுவன் ஷாருக்ஈஸ்வரன் வயிற்றுப் பகுதியில் இரும்பு தகடு விழுந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்து உயி*** ஆபத்தான நிலையில் உள்ள சிறுவன் ஷாருக்ஈஸ்வரன் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிக அளவு ரத்தப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து ரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழ****. இந்த சம்பவம் குறித்து புழல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்த அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை
04:07MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!
04:30திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !